ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பு அரிசி: பிரபல கிரிக்கெட் வீரர் அறிவிப்பு 

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நேற்று முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

பெரும் பணக்காரர்களுக்கு 21 நாட்கள் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு 21 நாட்கள் என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை விட பட்டினியால் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரிய சவாலாக இருக்கும்

இந்த நிலையில் எந்த ஒரு இயற்கை பேரிடர் வந்தாலும் ஏழை எளிய மக்களுக்கு கைகொடுக்கும் மனிதத்தன்மை இந்தியாவில் எப்போதும் நடப்பது உண்டு. அந்த வகையில் தற்போதும் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு கை கொடுக்க பலர் முன் வந்துள்ளனர்

அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கும் பின் தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஏழைகளின் மனதில் பாலை வார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சவுரவ் கங்குலியை போல மற்ற கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் திரையுலகினரும் தொழிலதிபர்களும் தங்களால் முடிந்த உதவியை ஏழை எளிய மக்களுக்கு இந்த நேரத்தில் செய்து மனிதத்தன்மையை காக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

More News

ஸ்பெயின் துணை பிரதமருக்கு கொரோனா: சீனாவை முந்திய சோகம்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும் சீனாவில் தற்போது அந்த வைரஸ் கட்டுக்குள் அடங்கியுள்ளது., கடந்த சில நாட்களாக சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

அமைச்சர் விஜயபாஸ்கரை வித்தியாசமாக பாராட்டிய பார்த்திபன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் எடுத்த முன்னெச்சரிக்கை அதிரடி நடவடிக்கைகளால்

கொரோனா விவகாரம்: பிரகாஷ்ராஜ் செய்த பிரமாதமான செயல்

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளே ஏழை எளியவர்களின் வீடுகளில் அடுப்பு எரியாமல் பட்டினி

கொரோனா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய குட் நியூஸ்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அதிரடி நடவடிக்கையாலும்,

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: 18 வயது இளைஞரும் ஒருவர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில்