புல்வாமா தாக்குதலுக்குப்பின் சிறையில் இருந்து விடுதலையான 2107 பாகிஸ்தானிய கைதிகள்!
- IndiaGlitz, [Monday,February 18 2019]
இந்திய பாதுகாப்பு படையினர் 44 பேர் பலியாக பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத தற்கொலைப்படை காரணம் என்பதால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சவுதி அரேபியா நாடு மட்டும் பாகிஸ்தான் உடனான உறவை மேலும் வலுப்படுத்தி வருகின்றது.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பயணம் செய்த சவுதி அரேபியா இளவரசர், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வேண்டுகோளை ஏற்று, சவுதி அரேபியா சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி கைதிகளாக இருக்கும் 2107 பாகிஸ்தானிய கைதிகளை விடுதலை செய்யவும் சவுதி அரேபிய இளவரசர் ஒப்புக்கொண்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுக்கு தீவிரவாத நாடு என உலக நாடுகளால் முத்திரை குத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்நாட்டிற்கு சவுதி அரேபியா முதலீடுகளையும் உதவிகளையும் அதிகரித்து இருப்பதை இந்தியா உள்பட உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.