சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் 10 பெண்கள்

  • IndiaGlitz, [Wednesday,June 06 2018]

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காத நிலையில் பல்வேறு போராட்டங்கள், கைதுகளுக்கு பின்னர் புதியதாக பொறுப்பேற்ற பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன்படி டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த பெண்களுக்கு கண் சோதனை உள்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு முதல்கட்டமாக 10 பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் பெண்கள் இவர்கள்தான். மேலும் இவர்களுக்கு ஏற்கனவே உலகின் பல நாடுகளில் லைசென்ஸ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பெண்களுக்கு வரும் 24ஆம் தேதி முதல் படிப்படியாக லைசென்ஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் சவுதி அரேபிய பெண்கள் சட்டப்படி சாலைகளில் கார் ஓட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையில் இளைஞர் கொலை: மலேசிய கள்ளக்காதலி காரணமா?

சென்னையில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் தகாத உறவு வைத்திருந்த மலேசிய பெண் இந்த கொலைக்கு காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

'காலா' படம் குறித்து கன்னட அமைப்புகளுடன் பேச தயார்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை வரவேற்க தற்போது ரஜினி ரசிகர்கள் தயாராக இருக்கும்

மகனை போல் எங்கள் வேதனையில் பங்கெடுத்தார்: விஜய் குறித்து தூத்துகுடி பெண்

தளபதி விஜய் நேற்று நள்ளிரவு தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பலியானவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார்.

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: மேலும் ஒரு மாணவி தற்கொலை

நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

நள்ளிரவில் தூத்துகுடி சென்ற விஜய்: பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி தூத்துகுடி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் போராடி வந்த நிலையில்