சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் 10 பெண்கள்
- IndiaGlitz, [Wednesday,June 06 2018]
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காத நிலையில் பல்வேறு போராட்டங்கள், கைதுகளுக்கு பின்னர் புதியதாக பொறுப்பேற்ற பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து பெண்கள் டிரைவிங் லைசென்ஸ் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன்படி டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த பெண்களுக்கு கண் சோதனை உள்பட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு முதல்கட்டமாக 10 பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் பெண்கள் இவர்கள்தான். மேலும் இவர்களுக்கு ஏற்கனவே உலகின் பல நாடுகளில் லைசென்ஸ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற பெண்களுக்கு வரும் 24ஆம் தேதி முதல் படிப்படியாக லைசென்ஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் சவுதி அரேபிய பெண்கள் சட்டப்படி சாலைகளில் கார் ஓட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.