விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து… 10 பேர் உயிரிழந்த கொடூரம்!

  • IndiaGlitz, [Friday,February 12 2021]

விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலை ஒன்றில் தற்போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும் 10 க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி ஒட்டிய பல்வேறு பகுதிகளில் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் அவ்வபோது வெடிவிபத்து நிகழ்வதையொட்டி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சில நேரங்களில் வெடிவிபத்துகள் நிகழ்வதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் சாத்தூர் அடுத்த அச்சன்குளம் கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கிறது.

இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மேலும் 10 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சம்பவ இடத்தில் தற்போது வருவாய்த் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.