விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து… 10 பேர் உயிரிழந்த கொடூரம்!

  • IndiaGlitz, [Friday,February 12 2021]

விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலை ஒன்றில் தற்போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும் 10 க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி ஒட்டிய பல்வேறு பகுதிகளில் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் அவ்வபோது வெடிவிபத்து நிகழ்வதையொட்டி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சில நேரங்களில் வெடிவிபத்துகள் நிகழ்வதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் சாத்தூர் அடுத்த அச்சன்குளம் கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கிறது.

இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மேலும் 10 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சம்பவ இடத்தில் தற்போது வருவாய்த் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

More News

மலக்குடலில் வைத்து 5 கிலோ தங்கம் கடத்தல்? அதிர்ச்சி சம்பவம்!

கோவை சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிலர் மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆட்டோவில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்- 6 பேர் கைது!

ஹைத்ராபாத்தில் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரை பயணம் செய்த ஆட்டோ டிரைவரே கடத்திச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்? சுவாரசியமான அறிவிப்பு!

20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை கரூரில் இயங்கிவரும் ஒரு தனியார் பெட்ரோல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

ஒரு குழந்தையின் உயிரைக் காக்க 16 கோடி ரூபாய் மருந்து! ஜிஎஸ்டி விலக்கு அளித்த பிரதமர் மோடி!

மும்பையில் பிறந்த ஒரு 5 மாதக் குழந்தைக்கு விசித்திரமான ஜெனடிக் நோய் ஏற்பட்டு இருக்கிறது.

ரிஷப் பந்த்-னா எனக்கு பயம்… மனம் திறக்கும் இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன் விதிதியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது.