சதீஷ் ஹீரோவாக நடித்த இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாகவும் நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்த சதீஷ் முதல்முறையாக ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் ஒரு சில படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். குறிப்பாக ’ஓ மை கோஸ்ட்’, ’காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ ஆகிய படங்கள் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள இன்னொரு திரைப்படம் ’வித்தைக்காரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 23ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் சதீஷின் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
சதீஷ் ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
#Vithaikkaaran to hit theatres from 23rd February
— Sathish (@actorsathish) February 3, 2024
#SimranGupta @WCF2021 @vijaywcf @Venki_dir @Vairamuthu @vbrcomposer @iamyuvakarthick @editorsiddharth @Gdurairaj10 @Muralikris1001 @R_chandru @Dharani_1708 @thinkmusicindia @teamaimpr @CtcMediaboy
God and Cinema Fans… pic.twitter.com/TjbQqp03g0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments