சத்யராஜ் வீட்டில் 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நபர்.. மகள் திவ்யாவின் அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,November 12 2024]

நடிகர் சத்யராஜ் வீட்டில் உள்ள ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக சத்யராஜின் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில், இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் சிபி, திவ்யா ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சிபி தமிழ் சினிமாவில் நடிகராக உள்ள நிலையில், மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

இந்த நிலையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக என் அம்மா கோமாவில் இருக்கிறார். எங்கள் வீட்டில் வைத்து அவரை நாங்கள் கவனித்து வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்து விட்டாலும், அதிக நம்பிக்கையுடன், நேர்மறை எண்ணத்துடன் மருத்துவ சிகிச்சையால் என் அம்மா கண்டிப்பாக குணமடைவார் என்று காத்திருக்கிறோம். எங்கள் அம்மா எங்களுக்கு திரும்பவும் கிடைப்பார் என்று எங்களுக்கு தெரியும்.

நான் கோமாவில் இருப்பதால், அப்பா தற்போது தனி நபராக குடும்பத்தை சமாளித்து வருகிறார். அவருடைய தாயார் கூட சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், நானும் அப்பாவுக்கு ஒரு தாய் போல் மாறிவிட்டேன். நானும் அப்பாவும் சக்தி வாய்ந்த தாய்களாக மாறி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வருகிறோம், என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை அடுத்து ரசிகர்கள், உங்கள் அம்மா கண்டிப்பாக உடல் நலம் தேறி மீண்டு வருவார்கள், என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.