ராணுவம் வந்தாலும் பெரியாரை அகற்ற முடியாது: சத்யராஜ் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரியார் சிலை உடைப்பு குறித்து பாஜகவின் எச்.ராஜா நேற்று கூறிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பெரியாரின் கொள்கைகளின்படி வழிநடந்து வருபவர்களில் ஒருவராகிய நடிகர் சத்யராஜ் இதுகுறித்து தனது கருத்தை வீடியோ ஒன்றின் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
திரிபுராவில் தோழர், புரட்சியாளர் லெனின் சிலையை உடைக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்
பெரியார் என்பது ஒரு சிலையல்ல, ஒரு பெயரல்ல, ஒரு உருவம் மட்டுமல்ல, ரத்தமும் சதையும் உள்ள ஒரு மனிதப்பிறவி மட்டுமல்ல, பெரியார் என்பது ஒரு தத்துவம், உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, பெண்களின் விடுதலைக்காக, மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்.
அவர் சிலையாக மட்டும் வாழவில்லை, எங்களை போன்றவர்களின் உள்ளதிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எந்த சக்தியை வைத்தும் எந்த பதவியையும் வைத்தும், எந்த ராணுவத்தை வைத்தும் எங்கள் உள்ளதில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்.
நேரம் குறித்து தேதி குறித்தால் பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயாராக இருக்கின்றார்கள். எச்.ராஜா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், தமிழக அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) March 7, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments