நம்மைவிட அவர்க்ள் உயர்ந்தவர்கள்; சத்யராஜ்

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக திரையுலகினர்களின் போராட்டம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர்களின் போராட்டம் உணர்ச்சிப்பெருக்காக உள்ளது. இந்த நிலையில் காவிரிக்காக போராடும் போராளிகளை வணங்குவதாகவும் போற்றுவதாகவும் சத்யராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது;

எல்லாருக்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது. அந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வருமானம் செய்யும் ஒரு பயணம் இருக்கின்றது. நமக்காக போராடும் போராளிகளுக்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது, வருமானத்தை நோக்கிய பயணமும் இருக்கின்றது. ஒரு பொதுநலத்திற்காக, சுயநலம் கருதாமல் குடும்பத்தை மறந்து வருமானத்தை துறந்து நமக்காக போராடும் போராளிகள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்

இந்த போராட்டத்தில் ஈடும்படும்போது கைது செய்யப்படலாம், வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் ஒரு பொதுநலத்திற்காக அவர்கள் போராடுகின்றனர். இன்று அவர்களுடைய போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக நடந்து கொண்டிருக்கின்றது. அந்த போராட்டக்களத்தில் நிற்பவர்கள் நம்மைவிட மிகவும் உயர்ந்தவர்கள். நான் அவர்களுடைய தியாகத்தை வாழ்த்துகிறேன் என்று சொல்ல வரவில்லை. என்னைவிட உயர்ந்த அந்த போராளிகளை வணங்குகிறேன் போற்றுகிறேன்' என்று சத்யராஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.