ஆன்மீக அரசியல் என்றால் என்ன? ரஜினியை மறைமுகமாக தாக்குகிறாரா சத்யராஜ்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல படங்கள் நடித்திருந்தாலும் திரைக்கு வெளியே நடிகர் சத்யராஜ் பல நேரங்களில் ரஜினியை மறைமுகமாகவும் நேரிடையாகவும் தாக்கி பேசியுள்ளார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் காவிரி பிரச்சனைக்காக சென்னையில் நடிகர் சங்கம் நடத்திய அறவழி போராட்டத்தின்போது சத்யராஜ், ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியபோது ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து விமர்சனம் செய்தார். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி வருவதே அரசியல் என்றும், வெற்றிடம் இருக்கும் நேரம் அரசியலுக்கு வருவது வியாபாரம் என்றும் சத்யராஜ் கூறினார்
மேலும் ஆன்மீக அரசியல் என்றால் 'இரும்புக்கரம் கொண்டு அடக்குவதல்ல என்றும், அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதுதான் என்றும் சத்யராஜ் ரஜினி கூறிய ஆன்மீக அரசியல் குறித்து விமர்சனம் செய்தார்.
வழக்கம்போல் சத்யராஜின் இந்த விமர்சனத்திற்கும் ரஜினி பதிலளிக்க மாட்டார் என்பது தெரிந்ததே. இருப்பினும் சத்யராஜின் இந்த விமர்சனத்திற்கு வரும் தேர்தலில் மக்களின் பதில் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments