திராவிடியன் ஸ்டார்… முதல்வரை நெகிழ்ந்து பாராட்டி வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, இனி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு சமூகநல ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை சத்யராஜ் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்ததோடு நன்றியும் கூறிக்கொண்டுள்ளார். இதுகுறித்து நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், “பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும இல்லை என்று அறப்பால் தந்த ஐயாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வருக்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று அறிவித்த எங்கள் பெருமைமிகு முதல்வருக்கு நன்றிகள்“ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்கள் திராவிடியன் ஸ்டார் ஸ்டாலின் அவர்கள் வாரணத்தின் நான்கு கால்களை பேரரங்கம் அதிர முழங்கினார். முழக்கங்கள் தொடர்கின்றன… முயற்சிகள் வெல்கின்றன… என்று பாராட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சத்யராஜ் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Actor #Sathyaraj sir thank you message to CM @mkstalin pic.twitter.com/tsNG3jXBRb
— Done Channel (@DoneChannel1) September 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments