நடிகர் சத்யராஜ் வீட்டில் நிகழ்ந்த துயர நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சத்யராஜ் வீட்டில் நிகழ்ந்த துயர நிகழ்வு காரணமாக திரையுலகினர் சத்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சத்யராஜ் என்பதும் ஹீரோ, வில்லன், குணசித்திர கேரக்டர் என பல்வேறு வேடங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் என்பவர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக கல்பனா மன்றாடியார் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் அவர்களுக்கு வயது 66 என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சத்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரை உலக பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com