சிபிராஜின் 'ஜாக்சன் துரை' திரை முன்னோட்டம்

  • IndiaGlitz, [Monday,June 27 2016]

கடந்த 2003ஆம் ஆண்டு 'ஸ்டுடண்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமான சத்யராஜின் மகன் சிபிராஜ், அதன் பின்னர் ஆரம்பகாலத்தில் தந்தை சத்யராஜூடன் மட்டுமே நடித்தார். 'லீ' போன்ற படங்கள் வெற்றி அடைந்த போதிலும் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் நான்கு வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த சிபிராஜ், 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படத்தின் வெற்றியால் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ள சிபிராஜ் நடித்துள்ள அடுத்த படம்தான் 'ஜாக்சன் துரை'. இந்த படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது.
மீண்டும் தந்தை சத்யரஜூடன் இணைந்தாலும் இப்போது புதிய களத்தில் முதன்முதலாக இருவருமே பேய்ப்படத்தில் நடிக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சத்யராஜூம், மொட்டை ராஜேந்திரனும் பேயாக மிரட்டியுள்ளனர். சிபிராஜூக்கு ஜோடியாக நடித்துள்ள பிந்துமாதவிக்கும் இந்த படத்தில் கனமான கேரக்டர் என்று கூறப்படுகிறது. மேலும் கருணாகரனும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பேய்ப்பட சீசன் ஓய்ந்திருக்கும் நிலையில் இந்த படம் வந்தாலும் வித்தியாசமான கதையமைப்பு இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர். ஏற்கனவே 'ஹலோ நான் பேய் பேசுகிறேன்' என்ற பேய்ப்படம் உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்த சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்ததா? என்பதை வரும் வெள்ளியன்று திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.

More News

'கபாலி' ரிலீசுக்காக காத்திருக்கும் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் வரும் ஜூலை 15-ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கபாலி' இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இவர்தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது...

நான் தமிழ் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா? சன்னிலியோன்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன், பாலிவுட் படங்களில் மட்டுமின்றி தமிழ் உள்பட ஒருசில தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்....

சீயான் விக்ரமின் மாப்பிள்ளை கருணாநிதிக்கு சொந்தமா? புதிய தகவல்

பிரபல நடிகர் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவின் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

24 வருட விஜய்யின் திரையுலக வரலாற்றில் 'தெறி' செய்த முதல் சாதனை

இளையதளபதி விஜய் திரையுலகிற்கு வந்த இந்த 24 வருடங்களில் சமீபத்தில் வெளியான 'தெறி' திரைப்படம்தான் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது...