எனக்கே இது புது செய்தி.. 'மோடி' வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது குறித்து சத்யராஜ்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படம் பாலிவுட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் மோடி கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் இன்று காலை முதல் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் கொள்கையில் தீவிரமாக இருக்கும் சத்யராஜ், இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருக்கும் மோடி கேரக்டரில் எப்படி நடிப்பார் என்ற கேள்வி பலருடைய மனதில் எழுந்த நிலையில் இதற்கு நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி கேரக்டரில் நடிப்பதற்கு என்னிடம் யாரும் இதுவரை பேசவில்லை, எனக்கும் இது புது செய்தியாக உள்ளது. வேண்டுமென்றே யாரோ இந்த செய்தியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள், ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தால் யோசிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் நடிகவேள் எம்ஆர் ராதா நாத்திக கருத்துக்களை கொண்டவராக இருந்தாலும் சில படங்களில் ஆன்மீகவாதியாக நடித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே இதுவரை மோடி கேரக்டரில் நடிக்க சத்யராஜை யாரும் அணுகவில்லை என்றாலும் ஒருவேளை இனிமேல் அணுகினால் அவர் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.