நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை: சத்யராஜ் கூறிய வித்தியாசமான காரணம்

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

கோலிவுட் திரையுலகில் விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினிகாந்த், டி.ராஜேந்தர், உள்பட பலர் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் அனைவருடனும் நடித்தவரும், பல திரைப்படங்களில் அரசியல்வாதி கேரக்டரில் நடித்தவருமான நடிகர் சத்யராஜ், பல மேடைகளில் அரசியல் பேசினாலும் இன்னும் நேரடி அரசியலுக்கு வரவில்லை

இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: 'எனக்கு ஓட்டு அரசியல் என்பதில் விருப்பமில்லை. என்னால் யாருக்கும் அடிமையாக இருக்க முடியாது. மக்களுக்கு கூட என்னால் அடிமையாக இருக்க முடியாது. மனதில் என்ன தோணுகிறதோ அதை பேசுகிறேன், அதையே ரசிக்கின்றேன். என்னுடைய கேரக்டரே இதுதான் என்று கூறியுள்ளார்.

சத்யராஜ் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அரசியலுக்கு வரும் நடிகர்களை அவர் விமர்சிக்க தயங்குவதில்லை. சமீபத்தில் ஒரு கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசியபோது, 'பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று யார் கருதினாலும் அது தவறாகவே முடியும். நடிகர்கள் அரசியலில் தோற்பது அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது” என்று கூறியிருந்தார்.

More News

சிலை போரில் சிக்கிய தமிழகம்-கேரளா! காந்தி சிலையும் தப்பவில்லை

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்திய பாஜக, அந்த சந்தோஷத்தில் அங்குள்ள லெனின் சிலையை உடைத்தெரிந்தது.

ரஜினி, கமலை அடுத்து அரசியலுக்கு வருகிறாரா அஜித்?

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல்நலம் ஆகிய இரண்டும் தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே.

திருமணத்திற்கு பின் ரீல் ஜோடியாகும் ரியல் ஜோடி

திருமணத்திற்கு முன் ஜோடியாக நடித்த நட்சத்திர ஜோடிகள் திருமணத்திற்கு பின் நடிப்பது அரிதாகவே இருந்து வருகிறது. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, உள்பட பலர் திருமணத்திற்கு பின் ஜோடியாக நடிக்கவில்லை

கமல், ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா? கவுதமி கருத்து

இன்று உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து நடிகை கவுதமி சற்று முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

சிறையில் சசிகலாவுக்கு சலுகை தரச்சொன்னது யார்? டிஜிபி அதிர்ச்சி தகவல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.