பொன்னியின் செல்வன்: சத்யராஜூக்கு பதில் நடிக்கும் பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகியதாக சமீபத்தில் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்தநிலையில் சத்யராஜ் நடிக்க இருந்த பழுவேட்டரையர் கேரக்டரில் தற்போது பிரபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய், மற்றும் த்ரிஷா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது என்பதும், இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout