36 வருடங்களுக்கு பின் வித்தியாசமான டைட்டிலில் சத்யராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சத்யராஜ் நடித்து வரும் புதிய படம் ஒன்றுக்கு 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை சமூக போராளி திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ளார். இந்த டைட்டில் சமூக வலைத்தளங்களில் டிரண்டில் இருந்து வருகிறது.
கடந்த 1982ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த படம் ஒன்றுக்கு 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. சிவகுமார், அம்பிகா நடித்த இந்த படத்தின் டைட்டில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து 36 வருடங்கள் கழித்து மீண்டும் அதேபோன்று ஒரு பரபரப்பான டைட்டிலில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் தீரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'யாமிருக்க பயமே, காட்டேரி மற்றும் வீரா படங்களுக்கு இசையமைத்த பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments