'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ்!

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

மணிரத்னம் இயக்கவுள்ள மல்டிஸ்டார் படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நாவலின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் மோகன்பாபு நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த கேரக்டரில் சத்யராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், அநிருத்த பிரம்மராயர், செம்பியன் மாதவி, மதுராந்தக தேவர், வீரபாண்டியன், பார்த்திபேந்திர பல்லவன், மந்தாகினி, சேந்தன் அமுதன், ஊமை பெண், கந்தமாறன், மணிமேகலை ஆகிய கேரக்டர்களுக்கு நட்சத்திரங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. இந்த படத்தை மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளார்.
 

More News

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு வரலட்சுமி நடித்த 'மிஸ்டர் சந்திரமெளலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார் மற்றும் மாரி 2 ஆகிய ஐந்து படங்கள் வெளியானது.

திருநங்கை கேரக்டருக்கு தேசிய விருது கிடைக்குமா?

தமிழில் தற்போது திருநங்கை கேரக்டரில் நடிக்க பலரும் முன்வந்துள்ளனர். குறிப்பாக 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கேரக்டரில் விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கப்பட்டுள்ள நிலையில்

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்திலும் நடித்து வருகிறார்

ரஜினி-விக்னேஷ் சிவன் சந்திப்பு! அடுத்த படத்தை இயக்குகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.