நயன்தாராவின் அடுத்த படத்தில் சத்யராஜ்: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நயன்தாராவின் அடுத்த படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது சத்யராஜை வரவேற்று சூப்பர் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா நடிப்பில் ’மாயா’ இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கனெக்ட்’. இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் மற்றும் தமிழ் நடிகர் சத்யராஜ் ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் சத்யராஜை இந்த படத்தில் வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் என குறிப்பிட்டு சத்யராஜின் சூப்பர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Rowdy Pictures is Honoured and thrilled to have Mr.Sathyaraj on board!#Connect @VigneshShivn #Nayanthara #Sathyaraj @Ashwin_saravana @mk10kchary @prithvi_krimson @haniyanafisa @ARichardkevin @Kavitha_Stylist @kabilanchelliah @SibiMarappan @Donechannel1 pic.twitter.com/JkbobE5Hsc
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) December 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments