சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,August 12 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின், டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 முதல், ஸ்ட்ரீம் செய்யப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸ், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது.

முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸ், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான, ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.

இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளை பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார்.

நடிகர் சத்யராஜுடன் பழம்பெரும் நடிகைகள் சீதா மற்றும் ரேகா ஆகியோர் நடிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு, மெல்லிசை மன்னர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜித் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

More News

'தங்கலான்' திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

உன் ரத்தமும் என் ரத்தமும் ஒன்றா? சூர்யாவின் 'கங்குவா' டிரைலர்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த பிரபலம்.. சூப்பர் வீடியோ..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்.கே 23' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மலையாள

'மகாராஜா' வெற்றி எதிரொலி.. 400 தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆன விஜய் சேதுபதி படம்..!

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான 'மகாராஜா' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. 

விஜே சித்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவரது கணவர் உள்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.