டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸ்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Saturday,August 03 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

மிக வித்தியாசமான முறையில், மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸினை, இயக்குநர் தாமிரா இயக்கியுள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார்.

இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸுக்கு மெல்லிசை மன்னர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

More News

ஆடிப்பெருக்கில் மோகன் ஜியின் புதிய திரைப்படம்.. மீண்டும் அவர் தான் ஹீரோ..!

இன்றைய ஆடிப்பெருக்கு தினத்தில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை நடந்ததை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு.. 'கோட்' படத்தின் சிங்கிள் பாடல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ஸ்பார்க் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்தின் 32 வருட சினிமா.. வாழ்த்துக்களுடன் பொங்கல் ரிலீஸை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்..!

அஜித் திரையுலகிற்கு வந்து 32 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் 'விடாமுயற்சி' படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்கள்

தமிழ் இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படம்.. தமிழ் உள்பட 5 மொழிகளில்..!

ஹாலிவுட் திரைப்படங்கள் போலவே தமிழ் உள்பட இந்திய மொழிகளிலும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழ் திரை உலகில் இதனை லோகேஷ் கனகராஜ்

சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்துடன் மோதுவது இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதே தினத்தில் வெளியாகும்