கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு சத்யராஜ் செய்த மகத்தான உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கோவை பகுதியில் பரூக் என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். திராவிட கழகத்தை சேர்ந்த பரூக், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்து பரூக்கை கொலை செய்ததாக அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் பரூக் குடும்பத்தினர் துன்பக்கடலில் மூழ்கியிருக்கும் நிலையில் திராவிடர் கழகத்தின் அனுதாபியும், பெரியாரின் உண்மைத்தொண்டர்களில் ஒருவருமான சத்யராஜ், கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்
சத்யராஜின் இந்த நிதியுதவி பரூக் குடும்பத்தினர்களுக்கு பேருதவியாக இருந்தது. அவர்கள் சத்யராஜூக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் சத்யராஜூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com