விரைவில் புதிய இயக்கம்: சத்யராஜ் மகள் திவ்யா அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
திவ்யா சத்யராஜ் ஒரு நன்கு அறியப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர். உலகின் மிக பெரிய மதிய உணவுத் திட்டமான அக்ஷய பாத்ராவின் விளம்பரத் தூதுவர். சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில் நடக்கும் முறைக்கேடுகளை பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அரசு மருத்துவமனைக்கு வரும் கர்பிணிப் பெண்களுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா சமீபத்தில் விவசாய அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து துறையில் செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டா் பட்டம் பெற்றவர்களை கெளரவிக்க அமெரிக்காவில் நடைபெறவிருந்த விழா கோவிட் 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் செல்வின் குமார் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால் கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்கு தான் என்பது நியாயம் கிடையாது. தமிழ் நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன்” என்று திவ்யா சொல்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout