ரஜினியின் 'கூலி' படத்தில் நடிக்க நிபந்தனை விதித்தாரா சத்யராஜ்?  பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘கூலி’ படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்க சத்யராஜ் நிபந்தனை இருந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை முழுவதும் தயாராகி விட்டதாகவும் அடுத்த கட்டமாக நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் மகள் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்பட்டது. அதேபோல் ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் சத்யராஜ் இந்த படத்தில் நடிக்க நிபந்தனை விதித்ததாகவும் வதந்திகள் கசிந்து வருகின்றன.

இந்த படத்தின் ஹீரோவுக்கு இணையாக தன்னுடைய கேரக்டர் இருக்க வேண்டும் என்றும் ஒருவேளை அப்படி இல்லை என்றால் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்றும் கூறப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. சத்யராஜ் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்றால் தன்னுடைய கேரக்டர் முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே பார்ப்பார் என்றும் சம்பளம் அதிகம் கொடுத்தாலும் தனக்கு பிடிக்காத கேரக்டரில் நடிக்க மாட்டார் என்றும் தான் கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது.

எனவே சத்யராஜ் தனக்கு பிடித்தமான கேரக்டர் இருந்தால் மட்டும் ‘கூலி’ படத்தில் நடிப்பார் என்றும் அதிக சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என்று கூறியதாக வெளியான தகவல் வதந்தி என்றே கூறப்பட்டு வருகிறது.

More News

'கூலி' பட விவகாரம்.. இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது குறித்து ரஜினிகாந்த் கருத்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அதில் தனது இசை இடம் பெற்றிருப்பதாகவும் அந்த இசையை நீக்க வேண்டும்

நேற்று தந்தை.. இன்று மகன்.. பாசத்தை பரிமாறும் இளையராஜா - யுவன் புகைப்படங்கள்..!

இசைஞானி இளையராஜா குடும்பத்தினர் தற்போது மொரீஷியஸ் நாட்டில் சுற்றுலா சென்றுள்ளனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின என்பதையும் பார்த்தோம்

புர்ஜ் கலிஃபா எதிரே மொட்டை மாடி நீச்சல் குளத்தில் டிடி.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் எதிரே உள்ள நட்சத்திர ஹோட்டல் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது

கவினின் 'ஸ்டார்' திரைப்படத்தில் இத்தனை பாடல்களா? இசை ராஜ்யமே  நடத்தியிருக்கிறார் யுவன்..!

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சேஷுவுக்கு சந்தானம் உதவி செய்யவில்லையா? அவரே அளித்த விளக்கம்..!

சமீபத்தில் காமெடி நடிகர் சேஷு காலமான நிலையில் அவரது சிகிச்சைக்கு சந்தானம் உதவி செய்யவில்லை என்று பொதுவாக செய்திகள் பரவிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு சந்தானம்