close
Choose your channels

தமிழிசை என்னை பார்த்து பயப்பட வேண்டாம்: சத்யராஜ் பதிலடி

Monday, April 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடிகர் சங்கம் சார்பில் நடந்த அறப்போராட்டத்தின் இறுதியில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார். அதில் குறிப்பாக ராணுவமே வந்தாமல் பயப்பட மாட்டோம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழராக குரல் கொடுப்போம் என்று பேசினார்.
 
சத்யராஜின் இந்த பேச்சுக்கு பதிலளித்த தமிழக பாஜக கட்சியின் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என்று காவிரி போராட்டத்தில் சத்யராஜ் கூறுகிறார். ஐடி ரெய்டு வந்தால் சத்யராஜ் எப்படி பயப்படுவார் என தெரியும்' என்று கூறினார் . தமிழிசையின் இந்த பேச்சு மூலம் எதிர்த்து பேசுபவர்களை ஐடி ரெய்டு மூலம் பயமுறுத்துவதை தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பாஜகவினர்களுக்கு எதிரிகள் வெளியில் இல்லை என்றும் அந்த கட்சியிலேயே இருப்பதாகவும் நெட்டிசன்கள் மேலும் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் தமிழிசைக்கு பதிலளிக்கும் வகையில், 'தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை; என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை என்று சத்யராஜ் கூறினார். மேலும் என்னிடம் ஐடி ரெய்டு நடத்தினால் ஒன்றும் தேறாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காவிரி பிரச்னை தீவிரமாக உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம் என்றும் போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment