மறக்க முடியாது பாலு சார், மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் ஆகியோர் வெளியிட்ட வீடியோ குறித்து பார்ப்போம்.

நடிகர் சத்யராஜ், எஸ்பிபி மறைவு குறித்து கூறியபோது, ‘எஸ்பிபி சார், 40 ஆயிரம் பாடல்கள். உங்கள் குரலுக்கு வாயசைக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. உங்களை பிரிந்து வாழும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு நான் உள்பட கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மறக்க முடியாது பாலு சார், உங்களை மறக்கவே முடியாது’ என்று சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் டி ராஜேந்தர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: என்னுடைய எத்தனையோ பாடல்களுக்கு உயிர் கொடுத்த எஸ்பிபி அவர்கள் மறைந்துவிட்டார் என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. அவருடைய இழப்பு இசையுலகிற்கே ஒரு பேரிழப்பு. அவருடைய குரலை கொரோனா குரல்வளையை பிடித்து எடுத்து கொண்டு போய்விட்டது. பாலில் தேன் கலந்தது போன்ற அவரது குரல் பார் இருக்கும் வரை நிலைத்திருக்கும். அவருடைய உடல் வேண்டுமானால் மறையலாம், ஆனால் அவரது குரல் எப்போதும் இருக்கும். அவருடைய குடும்பத்தினர்களூக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று டிராஜேந்தர் கூறியுள்ளார்.
 

More News

கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: சிவகார்த்திகேயன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்

எஸ்பிபியின் கடைசி பாடல் 'அண்ணாத்த' படத்திற்கா? டி.இமான் தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் கடைசி பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்திற்காக பாடப்பட்டுள்ளது என இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தெரிவித்துள்ளார் 

தலைமுறைகளை கடந்த தலைசிறந்த பாடகர்‌: கேப்டன் விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், எஸ்பிபி மறைவு குறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்.பி.பி சிகிச்சை பெற்ற புகைப்படம்: இணையத்தில் வைரல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் மரணம் அடைந்த தகவல் கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது

இளைஞருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பா??? அதிர்ச்சி சம்பவம்!!!

பொதுவாக ஒருவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்திய (வைரஸ், பாக்டீரியா) போன்ற நோய்க்கு எதிராக அவரது உடலில் எதிர்ப்பு ஆன்டிபாடி உருவாகி இருக்கும்.