ரஜினியின் அடுத்த படத்தில் சத்யராஜ்? அதுவும் இந்த கேரக்டரிலா? சம்பவம் செய்யும் லோகேஷ்..!

  • IndiaGlitz, [Monday,May 27 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் கசிந்து கொண்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ’கூலி’ திரைப்படத்தில் சத்யராஜ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ,சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’கூலி’. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வை கிட்டத்தட்ட லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது சத்யராஜ் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் ரஜினிகாந்தின் நண்பர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் வில்லன் கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’மிஸ்டர் பாரத்’ என்ற படத்தில் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தந்தை மகனாக நடித்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் நண்பர்களாக நடிக்க இருப்பதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.