சத்யராஜின் 250வது படம்.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சத்யராஜ் தற்போது 250 வது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சத்யராஜ் கடந்த பல ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதும் வில்லனாக அறிமுகம் ஆகி அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடித்த ’ஜாக்சன் துரை’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார் என்பதும் கல்யாணம் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ் நடிக்கும் நடிக்கும் 250 வது திரைப்படமான ‘ஜாக்சன் துரை 2’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட் போஸ்டரில் சத்யராஜ் மாஸ் லுக்கில் இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
JACKSON - The Monster 🔥
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) August 3, 2023
JACKSON DURAI
The Second Chapter
A P.V.Dharanidharan Film
Produced by
Sri Green Productions
I Dream Studios#Sibiraj#Sathyaraj@samyukthavv@Dharanidharanpv@SriGreen_Offl#IdreamStudios@Manishaganesh03#siddarthvipin@vikramkally @cheps911… pic.twitter.com/E3Hy8tPITR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments