ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு. டிஐஜி ரூபாவுக்கு நோட்டீஸ்
- IndiaGlitz, [Wednesday,July 26 2017]
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சிறப்பு சலுகைகள் வழங்கியதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ் மீது புகார் கூறியிருந்தார்.
இந்த புகாரை அடுத்து ரூபா வேறு பதவிக்கு மாற்றப்பட்டார் என்பதும் குற்றம் சாட்டப்பட்ட சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு, சத்யநாராயணராவ் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து மூன்று நாட்களுக்குள் ரூபா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் மீது ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.