பாப்கார்ன் ரகசியத்தை வெளியிட்ட சத்யம் சினிமாஸ்
- IndiaGlitz, [Wednesday,September 05 2018]
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய சத்யம் சினிமாஸை பிவிஆர் நிறுவனம் வாங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் சத்யம் சினிமாஸின் சமூக வலைத்தள பக்கத்தில் அங்கு விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் குறித்த தகவல் பகிரப்பட்டுள்ளது.
சத்யம் சினிமாஸ் திரையரங்கில் படம் பார்க்க செல்பவர்கள் அங்கு விற்கும் பாப்கார்னை சாப்பிட தவறுவதில்லை. இந்த திரையரங்கின் பாப்கார்ன் தனி ருசியாக இருப்பதை ரசிகர்கள் அனுபவித்துள்ள நிலையில் இந்த பாப்கார்ன் ருசியின் மர்மத்தை தற்போது அந்நிறுவனம் உடைத்துள்ளது.
இந்த திரையரங்கில் விற்பனையாகும் பாப்கார்ன் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா ஆற்றங்கரையில் விளைவதாகவும் அங்கிருந்து நேரடியாகக் கொண்டு வரபடுவதாகவும், இந்த பாப்கார்னை சென்னை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் சத்யம் சினிமாஸின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது
Ever wondered where your popcorn comes from?
— SPI Cinemas (@SPICinemas) September 4, 2018
Straight from the River Valley of Nebraska, where fields of golden corn stretch for miles, the home of @PreferredPopcorn. Join us as we celebrate 20 years of @PreferredPopcorn - the genesis of Sathyam Popcorn as you know it today! ?? pic.twitter.com/4YhkL2id4a