அஜித், தனுஷ் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’விவேகம்’, ’விஸ்வாசம்’, தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் சத்யஜோதி நிறுவனம். இந்நிறுவனம் ஏற்கனவே ஒரு சில படங்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ’அன்பறிவு’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் அஸ்வின் ராம் இயக்க உள்ளார்
மேலும் இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சசிகுமார், ஊர்வசி, சங்கீதா கிரிஷ் உள்பட பலர் நடிக்க உள்ளனர். மாதேஷ் மாதேஷ் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் தினேஷ் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
We're excited to announce our next film #Anbarivu starring @hiphoptamizha, Directed by @dir_Aswin.
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 14, 2020
Co-starring Napoleon, Vidharth @kashmira_9, Saikumar, Urvashi, @sangithakrish & Dheena.
DOP @madheshmanickam | Editor @PradeepERagav | Stunt Dinesh Subbarayan | @DoneChannel1 pic.twitter.com/dNsOseWjR9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com