சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் 'ஜெயிலர்' பிரபலம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் திரை உலகில் கமல்ஹாசன் நடித்த ’மூன்றாம் பிறை’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் நாயகனாக நடிக்க உள்ளார். இது அவரது 130-வது வரைபடம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தை இயக்குனர் ரவி அரசு இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அதர்வா நடித்த ’ஈட்டி’ ஜிவி பிரகாஷ் நடித்த ’ஐங்கரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Very Happy to begin our association with the Karunada Chakravarthy , Dear @NimmaShivanna through #Shivanna130 in Kannada ♥️🙏
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 12, 2023
Wishing the legend Dr. Shivanna , a very Happy birthday 🎉💐
Shooting starts Soon 🎬
Written & Directed by @dir_raviarasu pic.twitter.com/IRlDloIYjq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com