தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் மாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று சமீபத்தில் தனுஷ் அறிவித்திருந்த நிலையில் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ஜூன் 30-ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது
இனி அடுத்தடுத்து ’கேப்டன் மில்லர்’ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தனுஷ் ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The most awaited #CaptainMiller First Look on JUNE 30 , 2023 🥁🔥@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @dhilipaction @siddnunidop pic.twitter.com/XXPvoA2ku1
— Sathya Jyothi Films (@SathyaJyothi) June 27, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com