அஜித் பட நடிகைக்கு விஜய் டெக்னீஷியன்

  • IndiaGlitz, [Friday,March 18 2016]

விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' மற்றும் அடுத்து நடிக்கவுள்ள 'விஜய் 60' ஆகிய இரண்டு படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்தவர் பிரபல ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் சத்யா என்பது அனைவரும் அறிந்ததே. 'தெறி' படத்தில் அவருடைய திறமையை பார்த்து, தன்னுடைய 60வது படத்திற்கும் விஜய்யே பரிந்துரை செய்ததாக வந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள அகஷ்ரா கவுடாவுக்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அக்ஷரா கவுடா அஜித்தின் 'ஆரம்பம்' படத்தில் நடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லக்ஷமணன் இயக்கவுள்ள 'போகன்' படத்தில் மீண்டும் அதே வெற்றி ஜோடியான ஜெயம் ரவி-ஹன்சிகா இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரதமரை சந்திக்கின்றார் ரஜினி. பாஜகவுக்கு ஆதரவா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்க பாரதிய ஜனதா கட்சி கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி செய்து வருகிறது....

சசிகுமாரின் 'வெற்றிவேல்' டிராக்லிஸ்ட்

சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' படத்தின் இசைவெளியீடு இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள....

ஜி.வி.பிரகாஷூடன் இணைந்தார் சமந்தா

இளையதளபதி விஜய்யுடன் சமந்தா நடித்த 'தெறி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைக்கும் படம் ஒன்றின்...

டெல்லியை அடுத்து லண்டன். தொடரும் 2.0வின் பிரமாண்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், அக்சய்குமார் உள்பட பலர் இந்த படப்பிடிப்பில்....

விஜய்யின் 'தெறி' பட டிராக்-லிஸ்ட்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் இசைவெளியீடு வரும் ஞாயிறு அன்று மிக பிரமாண்டமாக சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது....