முடிவுக்கு வந்தது சத்யாவின் பிக்பாஸ் பயணம்.. இன்னொரு எவிக்சன் உண்டா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கடந்த வாரம் சாச்சனா மற்றும் ஆனந்தி ஆகிய இருவர் எவிக்சன் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் சத்யா குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில், அதில் சத்யாவும் ஒருவர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், அதன் பிறகு அவ்வப்போது குரல் கொடுத்தார் என்பதும் குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற அனைத்து டாஸ்குகளிலும் முழு ஈடுபாட்டுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களிலும் சத்யாவின் விளையாட்டு குறித்து பாசிட்டிவான கருத்துக்கள் சென்று கொண்டிருந்த நிலையில், இன்று அவர் திடீரென எவிக்சன் செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சில வாரங்களுக்கு டபுள் எவிக்சன் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று சத்யாவை தவிர இன்னொரு எவிக்சன் இருக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout