'சதுரங்க வேட்டை 2': அரவிந்தசாமிக்கு ஜோடியாகும் நம்பர் 1 நடிகை

  • IndiaGlitz, [Thursday,September 22 2016]

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நட்டி நட்ராஜ் நடிப்பில் மனோபாலா தயாரிப்பில் வெளிவந்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருந்ததை பார்த்தோம்.
இந்நிலையில் 'சதுரங்க வேட்டை' முதல் பாகத்தை இயக்கிய வினோத் இயக்கவுள்ள இந்த இரண்டாம் பாகத்தில் அரவிந்தசாமி ஹீரோவாக நடிக்க சமீபத்தில் ஓப்பந்தமானார். அரவிந்தசாமி நடிக்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில் தற்போது அவருக்கு ஜோடியாக கோலிவுட்டின் நம்பர் 1 நடிகையான த்ரிஷா நடிக்கவுள்ளதாக இன்னொரு செய்தி சற்றுமுன் வந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.,
முதல் பாகத்தை தயாரித்த மனோபாலாவே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷ்ணுவிஷாலுடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

விஷ்ணுவிஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை...

ஐஸ்வர்யாவின் அடுத்த படம் எப்போது? தனுஷ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை'...

ராதிகா ஆப்தேவிடம் தவறாக நடக்க முயன்ற நடிகர் யார்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்த ராதிகா ஆப்தே, சமீபத்தில் இந்தி படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்ததாக பரபரப்பான செய்தி வெளிவந்தது...

தொடரி-ஆண்டவன் கட்டளை படங்களின் ரன்னிங் டைம்

நாளை தனுஷ் நடிப்பில் உருவான 'தொடரி' மற்றும் விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன...

தனுஷ் எனது மருமகன் : 'பவர்பாண்டி' ராஜ்கிரண்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் தான் தனுஷ் என்பது உலகமே அறிந்தது. ஆனால் பிரபல நடிகர் ராஜ்கிரண், தனுஷை தனது மருமகன் என்றுதான் அழைப்பாராம்...