வாழ்க்கையில் முன்னேற அட்ஜஸ்ட் அவசியம்: படுக்கை விவகாரம் குறித்து பாஜக எம்பி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாகவே ஸ்ரீரெட்டி உள்பட பல நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து பரபரப்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நடன இயக்குனர் சரோஜ்கான் உள்பட ஒருசிலர் இந்த விவகாரத்தில் பல உண்மைகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பழம்பெரும் நடிகரும் பாஜக எம்பியுமான சத்ருஹன் சின்ஹா, இந்த படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் காலங்காலமாக நடந்து வருவதாகவும், நீ என்னை கவனித்து கொண்டால் நான் உன்னை கவனித்து கொள்வேன் என்ற பரஸ்பர பரிமாறுதல் தான் இது என்றும், எந்த பெண்ணையும் படுக்கைக்கு வருமாறு யாரும் கட்டாயப்படுத்துவதில்லை என்றும், தனி நபரின் விருப்பத்தை பொருத்தே இந்த விஷயம் நடப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படுக்கைக்கு அழைப்பதை தான் நியாயப்படுத்தவில்லை என்று கூறிய சத்ருஹன்ஷா, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் ஆண்களும், பெண்களும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகிவிட்டதகவும், இந்த நிலையை உருவாக்கியவர்களுக்கு தான் நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டுமே தவிர, சரோஜ்கான், ரேணுகா சவுத்ரி போறு உண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது தவறு என்று சத்ருஹன் சின்ஹா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments