பீட்டா ராதாராஜனுக்கு நடிகர் சதீஷ் பதிலடி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்காக பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஆறு நாட்களாக போராடி வருகின்றனர். மெரீனா மட்டுமின்றி தமிழகத்தின், இந்தியாவின், உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் பீட்டா அமைபை சேர்ந்த ராதாராஜன் என்பவர் இலவச செக்ஸ் என்றால்கூட இதைவிட அதிகமான இளைஞர்கள் கூடுவார்கள் என்று கூறியிருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு தமிழ் பெண்கள் உள்பட ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் பீட்டாவுக்கு எதிராக போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிராக போராட வைக்க வேண்டாம்' என்றும் நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.
RadhaaRajan don't use such a bloody bad words. Peta ku edhira poradum engalai oru paattikku edhira porada vekkaadha.
— Sathish (@actorsathish) January 21, 2017
RadhaRajan_ Ungal veettu pengal Marina vandhalum paadhukaappu koduppargal engal Thamizh ilaignargal. Engal unarvugalai kochaippaduththadhe
— Sathish (@actorsathish) January 21, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com