கட்டிப்பிடி வைத்தியத்தை கமலுக்கு செய்து காட்டிய நடிகர் சதீஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை இனிமேல் சனி, ஞாயிறு மட்டும் பார்த்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கடந்த திங்கள் முதல் துணி துவைப்பது உள்பட போரடிக்கும் காட்சிகளால் மனம் நொந்து இருந்து பார்வையாளர்களுக்கு நேற்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை அளிப்பதாக இருந்தது.
குறிப்பாக பார்வையாளர்களில் மனதில் தோன்றிய கேள்விககளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் சதீஷ் ஆகியோர் கமல்ஹாசனிடம் கேட்டது பெரும் வரவேற்பை பெற்றது.
பெரும்பாலான மக்கள் மனதில் இருந்த கேள்விகளில் ஒன்று பெண்களுக்கு ஆறுதல் கூறும்போது மட்டும் சினேகன் 'கட்டிப்பிடி' வைத்தியத்தை கடைபிடிப்பது, ஆண்களுக்கு மட்டும் தோளில் தட்டியோ, கையை பிடித்து கொண்டோ ஆறுதல் கூறுவது ஏன்? என்பதுதான். இந்த கேள்வியை கமலிடம் கேட்ட சதீஷ், கமலை கட்டிப்பிடித்து செய்தும் காட்டியது அனைவரையும் கவர்ந்தது.
அதேபோல் ஓவியாவுக்கு ஆரவ் மருத்துவ முத்தம் கொடுத்த காட்சியை ஏன் காட்டவில்லை என்ற ஸ்ரீப்ரியா கேள்வியும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கேள்விக்கு பதில் கூறிய பிக்பாஸ், 'உள்ளே உள்ள போட்டியாளர்களின் கண்ணியம் கருதியும், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் இப்படி செய்ததாகவும், அதை பார்த்து மக்கள் தவறான பாதையில் செல்லக்கூடாது என்பதற்காகவும் மேலும் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் அதிகம் பார்த்து வருவதாலும் அந்த மருத்துவ முத்தக்காட்சியை ஒளிபரப்பவில்லை என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout