ஓவியாவின் டுவிட்டை வைத்து ஆரவ்வை கலாய்த்த நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,September 05 2017]

ஓவியா நேற்று பதிவு செய்த ஒற்றை வரி டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். நான் இப்போது சிங்கிள். நிம்மதியாக இருக்கின்றேன்' என்று அவர் பதிவு செய்த டுவீட்டின் அர்த்தம், அவர் ஆரவ்வுடனான காதலை உதறிவிட்டார் என்பதை உறுதி செய்ததால் அந்த டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்தன.

இந்த டுவீட் பதிவு செய்யப்பட்டு இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் 53ஆயிரம் லைக்குகளும், 14 ஆயிரம் ரீடுவீட்டுகளும் கிடைத்துள்ளது. கோலிவுட்டின் எந்த ஒரு நட்சத்திரத்தின் டுவீட்டுக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சம்பவங்களை டுவிட்டரிலும் ஒருமுறை கமல் முன்பும் கலாய்த்த நகைச்சுவை நடிகர் சதீஷ், ஓவியாவின் டுவீட் குறித்து கூறியபோது, 'அப்போ அந்த தம்பி 100 நாட்களுக்கு அப்புறமும் உள்ளேயே இருக்க வேண்டியதுதான் போல' என்று ஆரவ்வை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.