14 வருடங்களுக்கு முன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல காமெடி நடிகர்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Monday,August 17 2020]

14 வருடங்களுக்கு முன் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பிரபல காமெடி நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஜெர்ரி’. எஸ்.பி.கந்தன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்தப் படத்தில் தான் நடிகராக அறிமுகமானது மட்டுமின்றி உதவி இயக்குனராகவும் பணிபுரிந்ததாகவும் அதுகுறித்த புகைப்படத்தையும் நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 14 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தற்போது நடிகர் சதீஷ், ரஜினியின் ’அண்ணாத்த’ கமலஹாசனின் ’இந்தியன் 2’ ஆர்யாவின் ‘டெடி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது