close
Choose your channels

ஹீரோவை அடுத்து இன்னொரு அவதாரம் எடுக்கும் சதீஷ்: வைரல் புகைப்படம்

Monday, December 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சதீஷ், ‘நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் சதீஷ் ஜோடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சதீஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கிட்டார் வாசிப்பது போன்றும், பவித்ரா லட்சுமி பாடல் பாடுவது போன்று உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தில் சதீஷும் பவித்ராவும் பாடல் பாடியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்த அப்டேட்டை விரைவில் அறிவிக்க உள்ளதாக சதீஷ் தெரிவித்துள்ளார். ஹீரோவை அடுத்து அவர் பாடகர் அவதாரத்தையும் எடுத்துள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த படத்தில் சதீஷ், பவித்ரா, ஜார்ஜ் மரியான், லிவிங்ஸ்டன், இளவரசு, சிம்ரன், ஞானசம்பந்தம், மனோபாலா, கேபிஒய் பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment