அடப்பாவிகளா, அவரே தவறு செய்யலாமா? நடிகர் சதீஷ் ஆதங்கம்!

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் ’அடப்பாவிகளா அவரே தவறு செய்யலாமா? என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூரியகுமார் மிக அபாரமாக விளையாடிய 57 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த போட்டியில் மூன்றாவது அம்பையர் எடுத்த இரண்டு முடிவுகள் சர்ச்சைக்குரியதாகியது. முதலாவதாக சூர்யகுமார் யாதவ்வுக்கு பிடிக்கப்பட்ட கேட்ச்சில் பந்து தரையில் பட்டதுபோல் வீடியோவில் தெரிந்த நிலையில் அதை கவனிக்காமல் 3வது அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். அதேபோல் வாஷிங்டன் சுந்தருக்கு பிடிக்கப்பட்ட கேட்சும் சர்ச்சைக்கு உரியதாக மாறியது

இந்த நிலையில் நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து ஆதங்கத்துடன் கூறியபோது, ‘அடப்பாவிகளா அது நாட் அவுட். தெரியாம தான மூன்றாவது அம்ப்பயரிடம் கேட்கிறோம், அப்புறம் அவரே செய்தால் எப்படி? என்று பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது

அதன்பின்னர் ஷர்துல் தாகுர் வீசிய கடைசி ஓவரில் டென்ஷன் எகிறிய நிலையில் ‘நல்லா கொடுத்தாங்கப்பா டென்ஷன், சூர்யகுமார் யாதவ் சூப்பர் எண்ட்ரி’ என்றும் பதிவு செய்திருந்தார்.