கருணாநிதி மீம்ஸ் குறித்து நடிகர் சதீஷ்

  • IndiaGlitz, [Friday,August 03 2018]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கோடிக்கணக்கான திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து 'பூமராங்' பட விழாவில் பேசிய நடிகர் சதீஷ், 'கருணாநிதி ஒரு மிகப்பெரிய தலைவர். அவர் போன்ற ஒரு தலைவர் இனி நமக்கு கிடைப்பது அரிது. எனவே தயவுசெய்து அவரது உடல்நிலையை வைத்து யாரும் மீம்ஸ் போட வேண்டாம். அவர் குறித்த மீம்ஸ்களை பார்க்கும்போது மனது கஷ்டமாக உள்ளது.

மேலும் மீம்ஸ்களை ஒருசிலர் தான் கிரியேட் செய்கின்றனர். ஆனால் நம்மில் பலர் அந்த மீம்ஸ்களை ஷேர் செய்து பரப்பி விடுகிறோம். நாம் அந்த மீம்ஸ்களை ஷேர் செய்யாமல் இருந்தாலே போதும். இப்போது ஜியோவில் இலவச டேட்டா இருக்கின்றது என்பதற்காக இதுபோன்ற மீம்ஸ்களை ஷேர் செய்வது தவறு என்று பேசினார்.

More News

ரஜினி, கமலுக்கு ஆதரவில்லை: தினகரனை ஆதரிக்க போவதாக பிரபல நடிகர் பேட்டி

அரசியலுக்கு வரும் எண்ணம் இருப்பதாகவும், அவ்வாறு வந்தால் ரஜினி, கமலுக்கு தனது ஆதரவு இல்லை என்றும், நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் டிடிவி தினகரனை ஆதரிக்க உள்ளதாகவும் தினேஷ் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன்: பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக சர்வாதிகாரி டாஸ்க்கால் ரணகளமாக பிக்பாஸ் வீடு இருந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

சக்கரநாற்காலியில் அமர்ந்த கருணாநிதி: உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் அவருடைய உடல்நிலையில் பின்னடைவு இருந்தாலும்

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் குறித்த தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி' படத்துடன் கனெக்சன் ஆகும் 'கும்கி 2'

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படமான 'இதயக்கனி' படத்துடன் பிரபுசாலமன் இயக்கி வரும் 'கும்கி 2' படம் கனெக்சன் ஆகியுள்ளது.