வாழும் கடவுளிடம் வாழ்த்த பெற்ற தங்கப்பதக்க தமிழ்மகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார் என்பது தெரிந்ததே. தங்கப்பதக்கத்துடன் தமிழகம் வந்த சதிஷ்குமாருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, தமிழக அரசும் அவரை கெளரவித்தது.
இந்த நிலையில் சற்றுமுன் சதீஷ்குமார் தனது சமூக வலைத்தளத்தில் தங்கப்பதக்கத்துடன் தனது பெற்றோர்களிடம் வாழ்த்து பெற்ற புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். உண்மையான கடவுளின் ஆசிர்வாதம் பெற்றேன் என்றும் அதில் சதிஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவரது பெற்றோர்களின் அடையும் மகிழ்ச்சி தத்ரூபமாக தெரிகிறது. ஒரு பெற்றோருக்கு இதைவிட மகிழ்ச்சியான ஒரு விஷயம் வேறு இல்லை என்பதை அந்த புகைப்படம் கூறுவதாக பலர் கமெண்ட் பகுதியில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சதீஷ்குமாரின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது. சதீஷ்குமார் இதைபோல் இன்னும் பல பதக்கங்கள் பெற்று பெற்றோரை எப்போதும் அவர் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வாழ்த்துவோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout