'கோட்' வெளியான சில நாட்களில் சதீஷின் 'சட்டம் என் கையில்'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி சில நாட்களில் சதிஷ் ஹீரோவாக நடித்த ’சட்டம் என் கையில்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’நாய் சேகர்’ உள்பட சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ’சட்டம் என் கையில்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோட்’ திரைப்படம் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து சதீஷின் ’சட்டம் என் கையில்’ வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
'சட்டம் என் கையில்' என்ற படத்தில் கதாநாயகனாக சதீஷ், நாயகியாக சம்பதா நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும், ஜோன்ஸ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Justice always prevails ⚖️@actorsathish's intense thriller #SattamEnKaiyil releasing in theatres on Sept 20th !!
— IndiaGlitz - Tamil (@igtamil) August 25, 2024
Directed by @chachhi150003
TN Release by @PicturesPVR @bharathwaj1119 @sriramproducer
Best wishes @MSJonesRupert @MuthaiahG @mimegopi @martintitus98… pic.twitter.com/YQtj0H31Cb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com