'கோட்' வெளியான சில நாட்களில் சதீஷின் 'சட்டம் என் கையில்'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,August 25 2024]

தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி சில நாட்களில் சதிஷ் ஹீரோவாக நடித்த ’சட்டம் என் கையில்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’நாய் சேகர்’ உள்பட சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ’சட்டம் என் கையில்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோட்’ திரைப்படம் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து சதீஷின் ’சட்டம் என் கையில்’ வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

'சட்டம் என் கையில்' என்ற படத்தில் கதாநாயகனாக சதீஷ், நாயகியாக சம்பதா நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும், ஜோன்ஸ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பைஜாமாவில் இரத்தம், சிதறிய விரல்களை நெஞ்சில் வைத்து கண்ணீர் விட்ட MGR

விஸ்வநாதன் , ராமமூர்த்தி என்ற இரட்டை ஜாம்பவான்களுக்கு அடுத்து தமிழ் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள் சங்கர் கணேஷ் ஆவர். அவர்களின் ஆளுமை நிறைந்த இசைத்துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

கிளாமரான கர்ப்பகால புகைப்படங்கள்.. பிரபல நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

சூர்யா, கார்த்தி படங்களில் நாயகியாக நடித்த நடிகை இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி உள்ள நிலையில் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில்

அமெரிக்காவில் பயிற்சி பெறும் பிக்பாஸ் மாயா.. அடுத்த ஒலிம்பிக் சாம்பியனா?

பிக் பாஸ் மாயா அமெரிக்காவில் ஒரு முக்கிய விளையாட்டின் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் தான் சாம்பியன்

👑இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் ? ( 25.8.2024 to 31.8.2024)

ஆச்சார்யா ஹரிஷ் ராமன் சொன்ன இந்த வார ராசி பலன்கள்: உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

தனுஷின் அடுத்த படத்தின் சிங்கிள் ரிலீஸ்.. இசையமைப்பாளரின் முக்கிய அறிவிப்பு..!

தனுஷ் நடித்து இயக்கிய 'ராயன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர்