'சட்டம் என் கையில்' இனி உங்கள் கையில்.. சதீஷ் வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த "சட்டம் என் கையில்" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், இன்று முதல் கூடுதல் திரையரங்குகள் மற்றும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட இருப்பதாக நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "சட்டம் என் கையில்" கடந்த வாரம் வெளியாகி சிறப்பாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளங்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு உதவியது. நல்ல விமர்சனங்களால், இந்த வாரம் "சட்டம் என் கையில்" படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் மற்றும் கூடுதல் காட்சிகளும் வெளியாகிறது.
இதுவரை படம் பார்க்காதவர்கள் பாருங்கள்; பார்த்தவர்கள் பிடித்திருந்தால் மீண்டும் சென்று பாருங்கள். ஒரு நல்ல படம் கொடுத்தோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். நல்ல படங்களுக்கு எப்போதும் உங்கள் ஆதரவு இருக்கிறது. "சட்டம் என் கையில்" இனிமேல் உங்கள் கையில்" என்று கூறியுள்ளார் நடிகர் சதீஷின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் உள்ளது.
#SattamEnKaiyil
— Sathish (@actorsathish) October 4, 2024
Increasing theatres and shows from today due to extraordinary reviews 😍
Thank u so much Press, Media, Paper,
Online, YouTube, social media God and Cinema Fans 🙏🏻🙏🏻🙏🏻
Love u always ❤️ pic.twitter.com/PCguYHCAVi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com