'சட்டம் என் கையில்' இனி உங்கள் கையில்.. சதீஷ் வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த சட்டம் என் கையில் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், இன்று முதல் கூடுதல் திரையரங்குகள் மற்றும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட இருப்பதாக நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, சட்டம் என் கையில் கடந்த வாரம் வெளியாகி சிறப்பாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளங்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு உதவியது. நல்ல விமர்சனங்களால், இந்த வாரம் சட்டம் என் கையில் படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் மற்றும் கூடுதல் காட்சிகளும் வெளியாகிறது.

இதுவரை படம் பார்க்காதவர்கள் பாருங்கள்; பார்த்தவர்கள் பிடித்திருந்தால் மீண்டும் சென்று பாருங்கள். ஒரு நல்ல படம் கொடுத்தோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். நல்ல படங்களுக்கு எப்போதும் உங்கள் ஆதரவு இருக்கிறது. சட்டம் என் கையில் இனிமேல் உங்கள் கையில் என்று கூறியுள்ளார் நடிகர் சதீஷின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் உள்ளது.

More News

விஜய் அணிந்த 'கோட்' மோதிரம்.. பரிசாக கொடுத்தது யார்?

தளபதி விஜய் தனது சமூக வலைத்தளத்தில் "கோட்" என்ற எழுத்துக்களைக் கொண்ட மோதிரத்தை அணிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு.. என்ன சொல்லியிருக்கிறார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு எத்தனை கோடி சம்பளம்? ஆச்சரிய தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.

நான் உங்களது வார்த்தையை ஏற்று கொள்கிறேன்.. நன்றி தேவி: சமந்தா

நடிகை சமந்தா நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து "நான் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி, தேவி" என கேப்ஷனாக கூறியுள்ளதை

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன யோகிபாபு: என்ன காரணம்?

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நடிகர் யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.